கம்பளிப் புழு

கம்பளிப் புழு

bookmark

கம்பளிப் புழு

இவை, தன் உடல் எடையை விட நான்கு அல்லது ஐந்து மடங்கு இலைகளை உண்பதால் இவைகளை உண்ணும் இயந்திரங்கள் என்றழைப்பர்.

இதனால் இவை இருபது நாள்களில் தன் உடல் எடையை இருபது மடங்கு அதிகரிக்கச் செய்து கொண்டு கூட்டுப்புழு பருவத்தை அடைகிறது.

பின் அவை தன்னைச் சுற்றி கூடு கட்டி சில மாதங்கள் வாழ்ந்த பின்னர், கூட்டிலிருந்து இளம் பூச்சியாக உருவெடுத்து வெளியே வந்து பறக்கிறது. 

மேலும் சுற்றுப்புறச் சூழலுக்கு ஏற்ப தன் உடலின் நிறத்தைக் கொண்டுள்ளது.

கம்பளிப் புழுக்களில் சில இனங்கள் தங்களை எதிரிகளிடமிருந்து காத்துக் கொள்ள நச்சுத்தன்மையுடன், அருவருப்பான தோற்றத்துடன் காணப்படுகிறது. எதிரிகளைத் தாக்க நச்சுத்தன்மையுள்ள உமிழ் நீரைப் பீச்சி அடிக்கிறது.

சில இனத்து கம்பளிப் புழுக்கள் எறும்பினங்களுடன் சேர்ந்து, அவைகளின் உதவியுடன் வாழ்கிறது.

பல கம்பளிப் புழுக்களின் உடலில் முட்கள் போன்ற முடிகள் கொண்டுள்ளது. உடலின் அடியில் எண்ணற்ற சிறு கால்கள் கொண்டுள்ளது.