கடல் நாய்
கடல் நாய்
தோலின் மேற்பரப்பில் ஒரு சதுர செ.மீட்டருக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் உரோமங்கள் வரை இருக்கும். மேற்பகுதியில் உள்ள உரோமங்கள் நீளமாகவும் கடல் நீர் தோல் பகுதியினுள் போகாத வகையிலும் அமைந்திருக்கும்.
மேலும், அடிப்பகுதியில் சிறுசிறு உரோமங்கள் அடர்த்தியாக இருக்கும். இந்த அமைப்பு, குளிர்ந்த தண்ணீரிலிருந்து பாதுகாத்துக்கொள்ள உதவுகிறது.
ஆண்டிற்கு ஒருமுறை உரோமங்கள் உதிர்ந்து புதிய உரோமங்கள் முளைக்கின்றன.
இவற்றின் மூக்கு மற்றும் காதுகள் தண்ணீரில் நீந்தும்போது மூடிக்கொள்ளும்படி அமைந்துள்ளன. கால்கள் துடுப்புகள் போல அகன்று தட்டையாகிவிடும்.
நுரையீரல் பெரிதாக இருப்பதால் இதன் உடலமைப்பு மிதக்கும் தன்மையினை உடையதாக உள்ளது. இதன் நுரையீரல் பிற தரைவாழ் பாலூட்டிகளைவிட இரண்டரை மடங்கு பெரியதாகும்.
