கடல் குதிரை
கடல் குதிரை
மிக சிறிய கண்களை உடையது. இது தன்னுடைய கண்களை எந்தப் பக்கமும் திருப்பி கொள்ளும். மேலும் குதித்து குதித்து ஓடும் ஒருவகை மீன் இனம்.
3 சென்டி மீட்டர் தொலைவில் இருந்து உணவை உறிஞ்சுபவை.
நிறம் மாறுவதில் பச்சோந்திகளைவிட இவை கில்லாடிகள்.
தங்கள் சக்திவாய்ந்த வால்களை உணவுக்கு சண்டையிடவும், புயலின் போது நங்கூரமிடுவதற்கும் ஆயுதமாகப் பயன்படுத்துகின்றன.
இவற்றிற்க்கு பற்களும் வயிற்றும் இல்லை. இது சாப்பிடும் உணவு அவற்றின் செரிமான அமைப்புகள் மிக விரைவாக செயல் படுகின்றன. இதனால் உணவு மிக விரைவாக அவர்களின் உடல்கள் வழியாக நகர்ந்து அதிக ஊட்டச்சத்தை உறிஞ்சும். அவர்கள் உயிருடன் இருக்க கிட்டத்தட்ட தொடர்ந்து சாப்பிட வேண்டும்.
இவை உயிருடன் வாழ கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 3,000 அல்லது அதற்கு மேற்பட்ட உப்பு இறால்களை உட்கொள்ளலாம்.
இது தன்னுடைய வாலை சீவீட் தாவரத்தின் மேலாக சுற்றி கொண்டு தலை கீழாக தொங்கும்.
உலகத்திலேயே கடல் குதிரை தான் ஆண் வர்க்கத்தில் கர்ப்பம் தரித்து குட்டிப்போடுகிறது.
ஆண் கடல் குதிரையின் வாலின் கீழே பை போன்ற அமைப்பு இருக்கும்.
பெண் கடற்குதிரைகள் தங்களின் முட்டைகளை 200 ஆண் கடல் குதிரைகளின் வால் பகுதியில் உள்ள இனப்பெருக்கப் பைகளில் விட்டுவிடும்.
அந்த முட்டைகளை ஆண் கடற்குதிரைகள் கங்காரு போல நன்கு பேணி ஆறு வாரங்கள் பாதுகாத்து குஞ்சுகளாகப் பொரிக்கின்றன.
இந்த முட்டைகள் சில நாள்கள் கழித்து பொரிக்கிறது. குஞ்சுகள் பொரித்த பிறகு சிறிது காலம் இதன் பையில்தான் வளர்கின்றன.
முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவரும் நேரத்தில் ஆண் கடற்குதிரைக்கு பிரசவ வலி வரும். அப்போது அது கடலுக்கடியில் உள்ள புதற்களுக்கிடையே கிடந்து மிகவும் சிரமப்படும்.
உடலை முன்னும் பின்னுமாக அசைத்து வளைக்கும். இப்படி வளையும்போது பையின் தசைகள் விரிவடையும். ஒவ்வொரு முறை வளையும்போதும் ஒவ்வொரு குஞ்சு வெளிவரும். இது 50 முதல் 100 வரை குஞ்சுகளை பொரிக்கும்.
பிறக்கும் குஞ்சுகளின் நீளம் சுமார் ஒரு செ.மீட்டராக இருக்கும். இருந்தாலும் பெற்றோர் இதற்கு அதிக பாதுகாப்பு கொடுக்கின்றன.
