ஓட்டு வீடு
"என் பையனை 'ராசா' மாதிரி வளர்க்கப்போறேன்!"
"ஐயையோ! அப்படியெல்லாம் வளர்க்காதீங்க... நல்ல பையனா வளர்க்கப் பாருங்க!"
"இந்த வீட்டுல இருக்கற எல்லோருக்கும் பதினெட்டு வயசுக்கு மேல ஆகுது தலைவரே...."
"அப்ப இதை 'ஓட்டு வீடு'ன்னு சொல்லு..."
"நாம சம்பாதிச்ச சொத்தெல்லாம் அநியாயமாப் போயிடுச்சே..."
"சுனாமியிலேயா?"
"இல்ல... பினாமியிலே!"
"நம்ம தலைவர் கிட்ட 'என் குழந்தைக்கு ஒரு இனிமையான பெயர் வைங்க'ன்னு சொன்னது தப்பா போச்சு.
"ஏன். என்ன பெயர் வெச்சாரு?"
"'அதிமதுரம்'ன்னு வெச்சிட்டாரு!"
"ஆட்சியில பங்கு கேட்க மாட்டோம்னு கூட்டணித் தலைவர்கள் எல்லாம் சொல்லிட்டாங்க தலைவரே...!"
"ரொம்ப சந்தோஷம்...!"
"ஆனா, ஊழல்ல பங்கு கேட்பாங்களாம்...!"
