ஒளியாய் மழையாய் நீ பொழிந்தாய்

bookmark

வளர்வேன் செழித்தே உயர்ந்திடுவேன்
கனிவாய் பரிவாய் நீ அணைத்தால்
இனிதாய் புதிதாய் மலர்ந்திடுவேன்
இறைவா முதல்வா வழிகாட்டு - என்
இதயம் உன் இல்லம் விளக்கேற்று (2)

1. துணையாய் அருகே நீ வந்தால் - எந்தத்
தொலைவும் எளிதாய்க் கடந்திடுவேன்
சுனையென அன்பு சுரந்து வந்தால் - நான்
சுகமாய் மகிழ்வாய் நடந்திடுவேன் - இறைவா ... ...

2. ஆற்றலும் அருளும் நீ தந்தால்
ஓராயிரம் பணிகள் ஆற்றிடுவேன்
தேற்றிட நீயும் அருகிருந்தால் எந்தத்
துயரச் சுமையும் தாங்கிடுவேன் - இறைவா ... ...