எல்லா வரமும் நிரம்பித் ததும்பும்

bookmark

திவ்ய ஸ்பிரித்து சாந்துவே
அடியோர் உள்ளத்தில் எழுந்து வருவீர்
இனிய ஸ்நேக தேவனே (2)

1. உலக இருளை அகற்ற உமது பரலோக ஒளி தாருமே 2
உம்மைக் கண்டு நன்மை பெற நாதனே அருள் புரிகுவாய்

2. நன்மை பயக்கும் ஞானக் கொடைகள்
யாவும் அளிப்பாய் பரமனே (2)
நல்வழியை நாங்கள் கண்டு நற்கதி பெறச் செய்குவாய்

3. ஞானம் புத்தி விமரிசையுடன் அறிவு திடம் பக்தியும் - 2
தெய்வப் பயமான வரங்கள் ஏழும் எமக்கு ஈவாயே