உம்மைத் தேடி வந்தேன் சுமை தீருமம்மா

bookmark

உலகாளும் தாயே அருள்தாருமம்மா - 2

1. முடமான மகனை நடமாட வைத்தாய்
கடல்மீது தவித்த கப்பலைக் காத்தாய் (2)
பால்கொண்ட கலசம் பொங்கிடச் செய்தாய் - 2
பொருள்கொண்ட சீமான் உன்பாதம் சேர்த்தாய் - 2

2. கடல்நீரும் கூட உன் கோயில் காண
அலையாக வந்து உன் பாதம் சேரும் (2)
உலகாளும் தாயே உனைப் பாடும் வேளை
நகர் தேடி வந்தேன் நலம் தாரும் அம்மா (2) -2