ஈசல்

ஈசல்

bookmark

ஈசல்

ஈசல் ஒரு நாள் உயிரி என்பது உண்மையில்லை. அவை உண்மையில் 15, 20 ஆண்டுகள் உயிர்வாழும்.

இவை ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கில் வெளிவரும்.

அவைகளில் பெரும்பான்மையானவை கொன்றுண்ணிகளாலும், சத்து இல்லாமையாலும் இறந்துவிடுகின்றன.

இவைகளில் தப்பித்த ஒர சில ஈசல்கள் வெற்றிகரமாக மண்ணிற்குள் நுழைந்தவிடுகின்றன. இனி அது புற்றை கட்ட ஆரம்பிக்கும்.

இவற்றிற்க்கு உணவு மண்டலம் கிடையாது. வயிறு பகுதி முழுதும் கொழுப்பும் புரதமும் நிரம்பி இருக்கும்.

இவற்றிற்க்கு 4 இறக்கைகள் இருந்தாலும் கூட அவற்றால் காற்றை எதிர்த்து பறக்க முடியாது. அதனால், காற்றில்லாத அமைதியான நேரத்தையே, அவை பறக்க தேர்ந்தெடுக்கின்றன.

கறையான் குடும்பத்து உறுப்பினர்தான் ஈசல்.

கரையான்களின் எண்ணிக்கை ஒரு எல்லையை கடந்தவுடன் ராணி இடும் முட்டைகள் சிறு மாறுதல்களுக்கு உள்ளாகும்.

இவ்வாறு மாற்றமடைந்த கரையான்கள் வெளிர் நிறத்துடனும், இறக்கைகளுடனும் பிறக்கின்றன. அவை தான் ஈசல்கள்.