இயேசுவே எல்லாம் நீ எனக்கு என்னுடனே நீயிருக்க

bookmark

எல்லாம் நிறைவெனக்கு என்றும் வாழ்வெனக்கு (2)

1. உயிரும் நீ உறவும் நீ என் உள்ளத்தின் உணர்வும் நீயே -2
அருளும் நீ திருவும் நீ புவி வாழ்வின் பொருளும் நீ
உயிரும் உறவும் உணர்வும் நீ
அருளும் திருவும் பொருளும் நீயே

2. நினைவும் நீ கனவும் நீ என் நெஞ்சின் நிறைவும் நீயே -2
ஒளியும் நீ விழியும் நீ நான் பார்க்கும் வழியும் நீ
நினைவும் கனவும் நிறைவும் நீ
ஒளியும் வழியும் விழியும் நீயே