இதயம் எழுந்து வந்தவனே என்னுள்

bookmark

இருளை போக்க வந்தவனே
அமுதம் சுமந்து நின்றவனே என்
ஆன்மா மீட்க வந்தவனே (2)

1. இதுவரை வாழ்வில் இலக்கணம் இல்லை
இறைவா கரையாவாய்
இளமையின் துடிப்பில் உன் பதம் மறந்தேன்
எனக்குள் விதையாவாய் (2)
என் விரல் கொண்டே விழிகளைச் சிதைத்தேன்
பார்வைக்கு ஒளியாவாய்
என் பரமே உன்னிடம் அமர்ந்தேன் எனக்குள் நீயாவாய்
என்றும் எனக்குள் நீயாவாய்

2. ஓவியப் பிழையாய் என் முகம் இழந்தேன்
இறைவா எனை வரைவாய்
ஓடிய மட்டும் ஓடிநான் நின்றேன் இறைவா முடிவாய் வா (2)
உன் உடல் தாங்கி பாவி நான் நின்றேன்
இறைவா எனில் வருவாய்
என்னரும் வாழ்க்கை இருட்டினில் கிடக்க
ஜோதியை ஏற்றிட வா அருள் ஜோதியை ஏற்றிட வா