அம்பயர்

bookmark

"கேரட் சாப்பிட்டா கண் நல்லா தெரியும்னு டாக்டர் சொல்லியிருக்காரு.. அதனால்தான் இப்ப நான் கேரட் சாப்பிடுகிறேன்.."

"நீங்க சாப்பிடுறது கேரட் இல்லை, முள்ளங்கி!"

"டேய், 2 வருடத்தில முடிக்க வேண்டிய "correspondance course"ஐ எப்படி 6 மாசத்துல முடிச்சுட்ட?"

"அதுவா, நான் "courier" மூலம் படிச்சேன்."

விசாரணை அதிகாரி: நோ-பால் போட காசு வாங்கினீங்க சரி! ஆனா ஒவ்வொரு பந்துக்குப் பிறகும் அம்பயரைப் பார்த்து ஏன் அழகு காண்பிச்சீங்க?

வீரர்: அம்பயர் சூதாட்டக்காரரோட மாமனாராம், அதனால அழகு காண்பிச்சாத்தான் காசு தருவேன்னு சொன்னார் அதான்.

சங்கீத வித்துவான் 1: எனக்கு மேடை ஏறி கச்சேரி செய்கிறதைவிட வானெலியில் கச்சேரி செய்கிறதுதான் ரொம்ப பிடிக்கும்.

சங்கீத வித்துவான் 2: ஏன் அப்படி சொல்லுறீங்க..?

சங்கீத வித்துவான் 1: அப்பதானே மேலே கல்லு வந்து விழாது.

"நேத்து ஏன் டாக்டர் நீங்க ஹாஸ்பிட்டலுக்கு வரலே?"

"ஜுரம், அதான் வரலே!"

"எனக்கும்தான் ஜுரம், நான் வரலியா?"