அன்னை மாமரி எங்கள் அன்பின் தாய்மரி

bookmark

நாமிந்த வேளையில் ஒன்றாய்க் கூடி வாழ்த்திப் போற்றிடுவோம்

1. அருள் நிறைந்த அம்மணி அகில லோக நாயகி -2
ஆண்டவனின் அன்புத் தாயும் நீ (எங்கள் அன்னையே) -2
காத்திடும் எங்கள்

2. அமல உற்பவம் நீயன்றோ அடைக்கலமும் நீயன்றோ -2
அகிலம் ஆளும் தேவதாயும் நீ (எங்கள் அன்னையே) -2
காத்திடும் எங்கள்

3. துன்பத்தில் துணை நீயன்றோ துயரம் துடைக்கும் தாயன்றோ
தூய்மை என்னும் லீலி மலரும் நீ (எங்கள் அன்னையே) -2
காத்திடும் எங்கள்