அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார்

bookmark

அற்புதங்கள் செய்கிறவர் என்றும் நமக்குள் வசிக்கிறார் (2)

1. தண்ணீரை இரத்தமாய் மாற்றினார் அதிசயம் - 2
வெறும் தண்ணீரை திராட்சை ரசமாய் மாற்றினார் அதிசயம் -2

2. செங்கடலை இரண்டாக பிரித்திட்டார் அதிசயம் - 2
புயல் காற்றை தம் ஆணையாலே அடக்கினார் அதிசயம் -2

3. குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார் அதிசயம் - 2
ஒரு சொல்லாலே மரித்தோரை எழுப்பினார் அதிசயம் -2

4. பாவியான என்னையும் உயர்த்தினார் அதிசயம் - 2
ஏழை என் மீதும் நேசக்கரம் நீட்டினார் அதிசயம் -2